பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள், தமிழகத்தில் எழுந்த தென்றல்; ஆயினும் தமிழகத்தோடு கிற்காத பூங்காற்று. திருக்குறள், எங்கும் பரவி, கின்று நிலவுவது: எல்லோரையும் வாழ்விப்பது; மகிழ்விப்பது. வாழ் வியல் முழுவதற்கும் இலக்கணம் கூறுவது. திருக்குறள் சிறந்த நீதி நூல். இந்த நூலைப் பற்றி டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் என்ற பேரறி ஞரின் கருத்தைக் கேட்போம். 'ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக் கோளாக இருக்க வேண்டும் என்பதை மிகுந்த உறுதி யோடு வள்ளுவர் கூறியிருக்கிரு.ர். ஒவ்வொருவனுக்கும் தனக்குத்தானே செய்யவேண்டிய கடமை என்ன? மற்றவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்ன? என்பனவற்றையெல்லாம் சிறந்த பண்பாட்டோடும் 10