பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மதி நுட்பத்தோடும் வள்ளுவர் பேசுகிரு.ர்.' இப்படி மதிப்பிடுகிருர் ஆல்பர்ட் சுவைட்சர் - i. - பெருமைமிக்க திருக்குறள் நாட்டிற்கு இலக் கணம் வகுப்பதோடு, இல்வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளது. - ஆட்சி உரிமை பெற்ற தலைவருக்குத் தேவையான வற்றைக் காட்டுகிறது. கல்வி கேள்விகளால் அறிவு பெறவேண்டு மென்று திசை காட்டுகிறது. அரசியல் செம்மையாக கடக்க, நல்லியலாக இயங்க, எவ்வெவற்றைக் கொள்ளவேண்டும் எவ்வெ வற்றைத் தள்ளவ்ேண்டும் என்று வழிகாட்டுகிறது. திருக்குறள். -- செங்கோலகை விளங்கும் ஆட்சித் தலைவன், எவ்வளவு இன்றியமையாதவனே, அவ்வளவு இன்றிய மையாதவர்கள் அறவழி வாழும் சான்ருேர்கள். இயற்கை வளத்தை மனித உழைப்பால் பயன் படுத்தி, போதிய உணவும் உடையும் உறையுளும் தேடித்தருவது அடிப்படைப் பணி. இவை மட்டும் மக்கள் இனவாழ்வை, கல்வாழ் வாக்கிவிட முடியாது. -- சமுதாயத்திற்கு வழிகாட்டி, எடுத்துக்காட்டான தங்கள் சீரிய நடத்தையால் அதைக் கட்டுப்படுத்தி நடத்திச் செல்லத் தகுதிபடைத்த சான்ருேர்கள். பலர் தேவை. அவர்களையே தக்கார் என்று குறிப்பிடு கிறது திருக்குறள்.