பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 தக்காரை எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது? அவர்களுடைய கல்லொழுக்கத்தால் - வறுமையுற்றபோதும் கொடைவளம் குறையாத கற்பண்பால் - இன்ன செய்தார்க்கும் இனியவே செய்யும் கல்லியல்பால், அடையாளம் கண்டுகொள். இப்படிச் சொல்கிறது திருக்குறள். இரண்டொரு தலைமுறைகளாக அல்லாது, பல தலைமுறைகளாகத் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் பழம் குடியில் தக்கார் தோன்ற வாய்ப்புண்டு என்பதைக் காட்டுகிறது திருக்குறள். பழங்குடியில் தோன்றிய அவர்கள் முழுச் சான்ருேர்களாகவே பிறப்பதில்லை. சான்ருேர்களாக் கும் கற்பண்புகளும் கல்லியல்புகளும் உறங்கிக் கிடக்கும் குழந்தைகளாகவே பிறக்கிரு.ர்கள். வழிவழி பண்பட்டு, இடையருது வங்த கற்குடியின் குழ்கிலே, கற்பண்புகளும் நல்லியல்புகளும் முளேக்க, ஒங்கித் தழைத்து வளரத் துணைநிற்கும். பழங்குடியின் மூத்தோர், மிகு கடமையுணர் வோடு, தம் மக்களே கல்வழிப்படுத்தி, அவையத்து முந்தியிருக்கச் செய்வதிலே, முனைப்பா யிருப்பர். இக்காலப் படிப்பாளிக் குடும்பங்களில் LI60, அலேந்து அலேந்து, புறப்பொருட் செல்வத்தைத் தேடு வதும் சேமிப்பதுமே, தங்கள் மக்களுக்குச் செய்யக் கூடிய உதவி என்று கருதுகின்றன. இது தவறு.