பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தொல்குடியோ, ண்ேட கெடிய பட்டறிவின் பிழம்பு. வஞ்சனேயால், சூதால், கொடுமையால் கொண்ட செல்வம், பேச்சு மூச்சில்லாமற் செல்லும் என்பதை உணர்ந்தவர்கள் சான்ருேர். நாடகத் திடலுக்கு ஒவ்வொருவராக வந்து, நாடகம் முடிந்ததும் சிலமணித் துளிகளில் போய்விடும் கூட்டம் போன்றது பொருட் செல்வம். அதைவிட விலையுயர்ந்தது, அறிவறிந்த மக்கட். செல்வம்: வழிவழி பண்பைக் குறையவிடாத மக்கட் செல்வம் என்பதைச் சான்ருேர்கள் அறிவார்கள். எனவே, தங்கள் உணர்வால், மெய்ப்பாட்டால், சொல்லால், செயலால், சான்ருண்மை ஓங்கி வளர் வதற்கு ஏதுவாக இருப்பார்கள். கல்ல, நூல் பிடித்தாற்போன்ற கெடுஞ்சாலையை. நினைத்துக் கொள்ளுங்கள். அது நீண்டதாகவும் இருக்கட்டும். அதிற் பயணஞ் செய்வோம். அப். போது நிற்க, பார்க்க, செல்க' என்பதுபோன்ற, எச் சரிக்கும் அறிவிப்புக்கள் சிலவற்றையாவது காண நேரிடலாம். எச்சரிக்கை அறிவிப்புகளில் சில, காரணத்தையும் காட்டக் கூடும். சொல்லும் செயலும் ஒன்ருயிருத்தல் சான் ருேர்க்கு அடையாளம். தகாதவற்றைச் செய்ய காணுதல் மற்ருேர் அறிகுறி. ஒழுக்கமும் வாய்மையும் கிறைந்திருப்பவர் சான்ருேர்.