பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 மலையளவு பொருள் வருவதாயினும் தினையளவு ஒழுக்கக் கேட்டிற்கும் உடன்படார் சான்ருேர். வறுமையிலும் வள்ளல் தன்மை குன்ருமை, வழியிலாக் குடியின் பண்பாட்டின்படி, வஞ்சனேயான வற்றைச் செய்யாமை, சிமங்த குடிமைக்கு எடுத்துக் காட்டுகள். - - இப்படிச் சுட்டிக்காட்டிய திருக்குறள் சான்ருேர், ஒரோவேளை, சறுக்கிவிட்டால் என்னவாகும் என்பதை யும் கோடிட்டுக்காட்டி எச்சரிக்கிறது. முழுநிலா நாள். ஆனல், வானமோ காரிருள் குழ்ந்திருக்கிறது. அப்போது நிலாவும் தெரியாது; அதன்மேல் உள்ள களங்கமும் தெரியாது. பிறிதொரு நாள்; மாசு மறுவற்ற வானம்; அப்போது தொலைவில் இருக்கும் முழுமதி தன்ைெளி யையும் அழகையும் பொழிகிறது. மக்கள், அதன் இதத்திலும் ஈர்ப்பிலும் உள்ளத்தைப் பறிகொடுத்துப் பரவசமடைகின்ருர்கள். மக்கள் அதோடு நிற்பதில்லை? வெண்மதியின் களங்கத்தையும் கவனிக்கிருர்கள், சுட்டிக் காட்டு கிருர்கள். - தீய இயல்புகளும் தீய ஒழுக்கங்களும் உடைய வர்கள், மக்களே போன்ற கயவர்கள். அவர்களுடைய குறைகள் பளிச்சென்று தெரிவதில்லை. மாருக கல்லியல்புகளுக்கும், கல்லொழுக்கக் திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய சான்ருேர்