பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ஒருவர், எப்போதோ ஒருமுறை சறுக்கித் தவறு செய்துவிட்டாலும், அப்பழி எல்லார் கருத்திலும் உறுத்தும். பன்னெடுங்காலம் உறுத்தும். H . ஆகவே, சான்ருேர்கள், மற்றவர்களைவிட அதிக விழிப்போடு வாழ்ந்து, நல்லொழுக்கத்தையும் கன்னடத்தையையும் காத்துக்கொள்ள வேண்டும். சான்ருேர்க்கு எச்சரிக்கைவிடும் திருக்குறள் இதோ, 'குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து, இக்குறளைக் கருத்தில் ஏற்போம். வாழ்நாள் முழுவதும் கினைப்போம்.