பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 அதில் குறுகலான இடங்களும் இருக்கும்: செங்குத்தான ஏற்றங்களும் இருக்கலாம்: மளமள வென்ற சரிவுகளையும் தவிர்க்க முடியாது. தீடீர்க் திருப்பங்கள், தெரியாத மூலைகள் இடைப்படும். இவற்றையெல்லாம் முன்கூட்டியே அறிவிக்கும் அறிவிப்புகளை நெடுஞ்சாலையில் காண்கிருேம். சென்று அடையவேண்டிய இடத்தைக் காட்டு வன நீதி நூல்கள். செல்ல வேண்டிய சாலேயைக் காட்டுவன நன்னூல்கள். வழியிலே, ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புகளைக் காட்டுவன பயனுள்ள _நூலகள. அத்தகைய, பயனுள்ள நீதி நூல்களில் ஒன்று திருக்குறள். அது காலத்தாற் பழையது கருத்திற் புதியது. மானுடம் முழுவதற்கும் பொருங்தும் உயரிய இலட்சியத்தையும், எல்லார்க்கும் ஏற்ற கன்னெறி களையும் காட்டும் திருக்குறள், உலகத்தின் கசப்பான உண்மைகளையும் சுட்டிக் காட்டுவது. உலகம் என்பது உத்தமர்களை மட்டும் கொண்ட தல்ல. = மக்கள் இனத்தின் மணிமுடிகளாக ஒளிவிடும் உயர்ந்தவர்கள் சிலரே. அச் சிலரைக் கண்டு பலரும் திருந்தவேண்டும்; ஒளிவிட வேண்டுமென்பது திரு வள்ளுவரின் விழைவு. i கல்லதை விழையும் வள்ளுவர், அல்லதையும் காட்டி, எச்சரிக்கிரு.ர்.