பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அதோ உயர்ந்து விளங்கும் சான்ருேர் சிலர். அவர்களைக் காண்பது அருமையும் புதுமையும் - இதோ கண்ணெதிரில் மொய்த்துக்கொண்டி ருக்கும் பலர்; இவர்கள் நம்மோடே இருப்பர். கம்மைப் போலவே இருப்பர்; கலந்தும் இருப்பர்: கலகலப்பாகவும் இருப்பர். எனவே தள்ள முடியாத கம்மவராகக் காட்சியளிப்பர். தொலைஞராகத் தோன்றும் சான்ருேரைவிட,. நெருக்கமாக உள்ளகூட்டத்தினர், நம்மைக் கவர்வர். கம் உள்ளம்கவர் கள்வர்களாகிய அவர்களே, மற்ற: மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட எதுவும் இராது. மக்களாகவே தோன்றும் அவர்களே அப்படியே. ஏற்றுக்கொண்டு ஏமாறுவது, நம்மில் பலருடைய இயல்பு! - அப்படி ஏமாறும் மக்களைத் தடுத்தாட்கொள்ள, கயமை என்னும் எச்சரிக்கை அதிகாரமொன்றையும் தங்துள்ளார் வள்ளுவர். - இது, சமுதாயப் பகுதியாகிய பொருட்பாலில் கடைசியாகக் கொடுக்கும் எச்சரிக்கை என்பதைச் சிந்திக்க வேண்டும். கயவர்களை எப்படிக் கண்டு கொள்வது? உருவ: வேற்றுமை உணர்த்துமா? அப்படியொரு வேற்றுமை இராது. பார்ப்பதற்கு. மற்றவர்களைப்போலவே அவர்களும் இருப்பர்.