பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மெலியார் சென்று தம் குறையச் சொல்லியதும், தயங்காது, சட்டென்று உதவி செய்பவர் சிலருண்டு, குமண வள்ளலேப் போல. அவர்களோ சிலராகிய சான்ருேர். பலராகிய கயவர்களோ அதற்கு நேர்மாருன வர்கள்; எளிதில் உதவமாட்டார்கள். கோரும் உதவி சிறிதே ஆயினும் கொடார். உதவியை நாடு வோர் உதவிக்கு உரிமையானவராயினும் கொடார். மாருக, கரும்பைப் பலமுறைக் கடிப்பதுபோல், அடுத்தடுத்துக் கசக்கிப் பிழிந்தாலே பிறருக்கு உதவுவர். நாள்தோறும் அத்தகையோரை காம் காண் .கிருேம். அத்தகைய கீழோரை, இனிய கரும்பிற்கு ஒப் .பிட்டுப் புகழ்வது போலப் பழிக்கிருர் திருவள்ளுவர். சொல்லப் பயன்படுவர் சான்ருேர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.