பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டு, உடுத்து, பெற்று, வருந்தி, சின்னகைப் பேசிச் சிரித்து, காலத்தைக் கரைத்து, கொங்து மடியும் வேடிக்கை வாழ்க்கை, மனித வாழ்க்கை ஆகாது. அத்தகைய வாழ்க்கை தாவர வாழ்க்கை: விலங்கு வாழ்க்கையாகும். மனித வாழ்க்கை எப்படி அமையவேண்டும்: அதற்கு எவை எவை தேவை? முதலில் உள்ளது சிறக்கும் உயரிய குறிக்கோள் தேவை. -" மக்கள் பண்பைப் பெருக்கி வாழும் குறிக்கோள், உயரியது. மக்கள் பண்பின் அடையாளம் எது? பிறிதிைேய் தன்னேய் போலக் கருதித் துடிப்பது பண்பின் அடையாளம். அத்துடிப்பு, காலத்தினம் செய்யும் உதவியாகக் கனிய வேண்டும்.