பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 உயர்ந்த குறிக்கோள் உள்ள மனிதன், தான் வளர்ந்து வாழ்வதோடு, தன்னைச் சுற்றியுள்ள சமு தாயமும் வளர்ந்து வாழப் பாடுபடுவான். அங்த கன் முயற்சிக்கும் இடர்கள் பல வரக்கூடும். - எனவே, மேற்கொள்ளப்போகும் பணியின் கடுமையினேயும், தன்வலியையும், இடர்களின் அழுத் தத்தையும் உணர்ந்து, திட்டமிட்டு, பொறுமையாகச் செயல்பட வேண்டும். - அப்படிச் செயல்படும்போது, தக்கார் துணை யினையும் பெற்று, முன்னேற வேண்டும். எண்ணி யதை எண்ணியவாறு முடிக்கும் திண்மையைப் பெற வேண்டும். திண்மைக்கு உரம், செயற்கரிய செய்த பெரியோர் இணக்கம். சிற்றினம் சேருதல், பயனற்ற சொல்லுதல் o வெகுளுதல், தீய ஒழுக்கம், கொடுமைப் படுத்துதல், ஆகிய புற்பூண்டுகளைக் களைந்தெடுத்தால், திண்மைப் பயிர் ஓங்கி வளரும். கல்வி, கேள்வி, நற்சிங்தனே ஆகியவற்ருல் பெறும் அறிவு, மண்ணில் நல்லவண்ணம் வாழத் துணைபுரியும். சிறந்த இலட்சியங்களையும் உயர்ந்த வாழ்க்கை நெறிகளையும் காட்டும் நல்ல நீதி நூல்களில் ஒன்று திருக்குறள். --- அது காலத்தாம் சுருங்கி வீணுகிப் போகும் நூலல்ல. திருக்குறள், எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் - கூடிய அடிப்படை இயல்புகளே, உணர்வுகளை, உண்மை