பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 களைக் காட்டுகிறது. எதிரும்புதிருமான கருத்து ஒட்டங்களுக்கிடையே, தெளிவான, எல்லாருக்கும் பொது வான, நன்னெறிகளை எடுத்துக் காட்டுகிறது. எனவே, ஏறத்தாழ, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ஏட்டுச்சுவடியாக உருவான திருக் குறள், இன்று, இங்காட்டு மக்களிடையே மட்டுமன்றி, பிறகாட்டு அறிஞர்களிடையிலும் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஞாயிற்றின் ஒளியும் தென்றலின் குளுமையும் எல்லோர்க்கும் பொதுவாக கின்று, பயன்பட்டு, மக்கள் இனத்தை வாழ்விப்பதைப்போல், திருக் குறளும், அன்றும் இன்றும் மக்களுக்கு நல்வாழ்வு அளித்து வருகிறது: காளையும் அளிக்கும் என்பது உறுதி. தமிழில் தோன்றி, பன்மொழிகளில் பெயர்ந்து வாழும் திருக்குறள், கம் வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டுவதோடு நின்றதா? இல்லை. தடத்தைச் சுட்டிக் காட்டியதோடு கின்று விட்டதா? இல்லை, இல்லை. வழியிலே உள்ள பள்ளங்களை, திருப்பங்களை, மூலேகளே, இடர்களையும் குறித்துக் காட்டுகிறது. எங்கெங்கே, சத்திரம் சாவடிகளாகப் பயன்படுவன உள்ளன என்பதையும் காட்டுகிறது. முறைப்படி வாழும் மனிதனுடைய இலட்சியப் பயணத்தில், அடுத்துக் கெடுப்போர் வரக்கூடும். அத் தீயோரையும் எதிர்பார்க்க வேண்டும்.