பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 அங்கத் தீயவர்கள், தியவர்களாகத் தோற்ற: மளிக்கமாட்டார்கள். எல்லோரையும் போலவே . காட்சியளிப்பார்கள். மற்றவர்களைப் போலவே, அச்சமின்றி, கலகலப்பாக, பலரோடும் நெருங்கி" உறவாடும் கயவர்களைக் கண்டு, காம் சிறிதும் ஏமாந்து விடக்கூடாது, நல்ல உஃாத்தின் நறுமலரல்ல, அவர்களுடைய கலகலப்பான உரை. பழிபாவங்களுக்கு அஞ்சாத கீழ்த்தன்மையின் சல்சலப்பே, அவர்களுடைய கலகலப்பு. பொருமை அவர்களுடைய இயல்பு. அவ்வியல்பினே உடைய கயவர்கள், தமக்கு. வேண்டியவர்கள் எவவளவு வேண்டியவராயினும், வறுமையற்று வளமாக வாழ்வதைக் கண்டதும், பொருமைப்படுவார்கள். தமக்கு உதவும் நல்லவர்களின் வளத்தையும் கண்டு, அழுக்காறு கொள்ளும் தீயவர்கள், மிகப் பழக்கமானவர்களே. அத்தியோர், வள்ளுவர் காலத்திலும் வாழ்ந்து. வங்தார்கள். வறுமையற்று வாழ்பவர்களைக் கண்டு. பொருமைப் பட்டார்கள். அதோடு நில்லாமல்,. அவர்கள். மேல் இல்லாத பொல்லாத பழியைச் சுமத்தி மகிழ்ங்தார்கள். அத்தகைய கயவர்களைப் பற்றி எச்சரிக்கக் கருதிய திருவள்ளுவர் ... . உடுப்பது உம் உண்பது உம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்ருகும் கீழ். . -- என்னும் ஆயிரத்து எழுபத்தொன்பதாம் குறளே வழங்கினர். இதைப் படித்து, சிந்தித்துப் பலன்பெறு: வோம். * - ---