பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் இனங்களிலே உயர் இனம் மனிதன். அவன் எதல்ை உயர் இனம்? பிற எவ்வுயிர்க்கும் இல்லாத ஆரும் அறிவினைப் பெற்றதால், மக்கள் இனம் தனிச் சிறப்புடையது. எனவே, காம் ஆரும் அறிவினேப் பயன்படுத்த வேண்டும். கல்லது எது, கெட்டது எது என்று பகுத்து உணர வேண்டும். தெளிந்த அறிவில் கிடைக்கும் கல் அமுதத்தை உண்டு மகிழ்வதோடு முடங்கிவிடாமல், பிறரும் வாழத் துணேகிற்றல் ஒவ்வொரு மனிதனுடைய கடமையு மாகும்; தலையாய கடமையுமாகும். மற்ருேர் கோணத்தில் பார்த்தால், மனிதன், கிறையும் குறையும் கலந்த ஒரு விசித்திரமான கலவை. 11 +