பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 அவன் நிறையை வளர்க்க வேண்டும்: குறை யையோ குறைத்துக்கொண்டே வரவேண்டும். அப் படிச் செய்வதன் மூலம், பையப் பைய வளர்ந்து, சிறந்து, உயர்ந்து, வாழ வேண்டும். *** - நெறியோடு வாழ்ந்து, பண்போடு செயல்படுதல், அறிவுடைமை யாகும். உயர்ந்த குறிக்கோளை நோக்கி, பண்போடு இயங்கி, நெறியோடு முன்னேற வழிகாட்டும் அற நூல்கள் சில. அவை, எம் மொழியிற் பிறந்தாலும் எல்லா மொழிகளுக்கும் உரியனவாம். இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படாது, எல்லா இடங்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் உரியனவாக விளங்கும் நீதி நூல்களே சிறந்தவை. அவற்றில் ஒன்று நம் திருக்குறள். - எல்லாச் சமயத்தினருக்கும் எல்லாச் சாதி யினருக்கும் பொதுவான உண்மைகளைத் திருக்குறள் காட்டுகிறது. H எனவே, யாவரும் விரும்பிப் பாராட்டும் கிலே, அந்நூலுக்கு அமைந்தது. - திருவள்ளுவர், எல்லாக் காலத்துக்கும் கிலத்து நிற்கும் மானிடப் பண்பின் உயிர் நிலையை, நன்கு துருவி, ஆராய்ந்து கண்டுகொண்ட்ார். அதன் ஆற்றலே யும் அவர் கன்கு அறிந்தார். 1.