பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 மானிட வாழ்க்கையின் பயன் இன்னதென்பதும் திருவள்ளுவருக்குத் தெளிவாகத் தென்பட்டது. அப் பயனே அடைய, மாங்தர், தம்முன் நிறுத்திக் கொண்டு வழிபடவேண்டிய குறிக்கோள்களையும் விளக்கமாகக் கூறுகிருர். o அவற்றை அடைவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய முறைகளையும் வகுத்துக்காட்டுகிருர் திரு வள்ளுவர். o ஈரடியால், எழுசீரால், மக்கள் வாழ்க்கைக்கு வேண்டியவற்றைத தெளிவுறக் கூறுகிருர் திரு வள்ளுவர். -- தள்ள வேண்டுவன எவை, கொள்ள வேண்டுவன எவை, என விளக்குகிருர். எதைத் தேடவேண்டும், எதைக் கைவிடவேண்டு மென்று நெறிப்படுத்துகிருர். அம்மட்டோ மனிதன் சமுதாயத்தில் வாழ்பவன்; சமுதாயத்தால் வாழ் பவன்; சமுதாயத்திற்காக வாழ்பவன். அங்தச் சமுதாயத்தில் பலவகையானவர்கள் வாழ்வார்கள். = சிறிய உதவிகளையும் பெரிதாகக் கருதி நன்றி பாராட்டும் கல்லோர்கள் பலர் இருப்பார்கள். எத்தனே பெற்ருலும் கொடியிலே மறப்போர் களும் இருப்பார்கள். கொல்வதைப் போன்ற தீமை புரிவோர்க்கும் துரும்பளவுகெடுதலும்செய்யாத மேலோரும் இருப்பர்.