பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露。 புனல்காடு பெயர் பொருத்தம் உடையதே. அந்த காட்டின் ஏரி குளங்களிலும், ஆறுகளிலும் மடுக் களிலும் எப்போது நீர் இருக்கும். அத்தகைய புனல்நாடும் வரண்டு போகும் நிலை எப்படியோ ஏற்பட்டது. அதைப் பார்த்து மக்கள் கதறினர்; செய்வதறியாது குமுறினர். புனலூர் கல்லான் முயற்சி உடையார் மன உறுதி உடையார், துணிவு உடையார்: முன்னேடி இயல்பினரும். எனவே கிணறு தோண்டத் திட்ட மிட்டார். மணற்பாங்கான இடத்தில் Gauàບ தொடங்கிற்று. கல்லானே மேற்பார்வை செய்தார். தோண்டினர், தோண்டினர்; பன்னிரண்டு அடி தோண்டினர். நீரைக் காணுேம். சளைக்கவில்லை. அதோடு விட்டுவிடவில்லை. தொடர்ந்து தோண்டி னர். பதின்மூன்ரும் அடியில் நீர் கசிந்தது. தோண்டு வோருக்குப் பூரிப்பு. மளமளவென்று விரைந்து தோண்டினர். கன்ருக ர்ே ஊறிற்று. ைேர இரைக்க