பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 மிகுதிக்கண் மேற்சென்று இடிக்காத கயவர்களைக் கண்டு ஏமாறுவோர் பலர். அவர்களே மெய்யன்பர் களாகக் கருதி, அவர்களிடம் இரகசியம் எதையும் சொல்லி விட்டால் போதும்; ஊரறிய விரைந்து :பறைசாற்றிவிட்டே மறுவேலை பார்ப்பார்கள். தன்ைேடு உறவு கொண்டவரின் வளமையைக் கண்ட கொடியில், அழுக்காறு கொண்டு, அவர்மேல் வீண்பழி சுமத்தும் கீழ்மக்கள், உறுதியான துணை வர்கள் என்று ஏமாந்துவிடக் கூடாது. கண்பர்களாக கடிக்கும் அவர்கள், தங்களுக்குச் சிறு துன்பம் வந்தாலும். அதிலிருந்து தப்பும் பொருட்டு, தங்களே விற்றுவிடுவார்கள். அதாவது நண்பர்களைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள். விரைந்தே காட்டிக் கொடுப்பார்கள். அதை நமக்கு உணர்த்தவே, எற்றிற் குரியர் கயவர் ஒன்றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து என்னும் அருமையான திருக்குறளை வழங்கி யுள்ளார் திருவள்ளுவர்.