பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழமாகத் தோண்டி னர். குபுகுபுவென்று நீர் ப்ொங்கிற்று. பம்பு செட்” வைத்து இரைத்தனர். கிணறு கட்டினர். இருபத்தி காலு அடி ஆழக் கிணறு கட்டினர். - இடையிலே நடந்ததைக் கவனிப்போம். கோடை விடுமுறைக்காக, புனலூர் வந்திருந்தார் நாயகம். அவர் பேராசிரியர். நல்லானின் நண்பர். ஆகவே கல்லானேடு இருந்து, கிணறு எடுப்பதைக் கவனித்து வந்தார். இரு நண்பர்கள் சேர்ந்தால் மெளனமாக இருக்கமுடியுமா? உரையாடல் இதோ! மணற்பாங்கான இடம் கிடைத்தது, நல்லதாகி விட்டது. வேறு வகை இடமால்ை தோண்டுவதே கடினமாயிருக்கும்’ என்று மகிழ்ந்தார் கல்லான். "ஆம்! ஆம்! மணற் பூமியானதால், தோண்டுவது எளிதானது. வேறு பூமியாக இருந்தால், கிணற்றில் தண்ணிர் காண்போமா என்பதே ஐயம்’ என்ருர் காயகம். “நூறு அடி, இருநூறு அடி தோண்டியும் நீர் காணுத கிணறுகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருக் கிறேன். கம்முடைய கிணறு அப்படிப் பாழாகிப் போகவில்லை என்பது பற்றித் திருப்தி என்ருர் கல்லான். ‘'எவ்வளவு தோண்டியும் சுரக்காத கிணறுகளைப் பற்றி கானும் கேள்விப்பட்டிருக்கிறேன். மணற் கேணி தவருது சுரக்கும். பிற கேணிகளைப்பற்றி அப்படி உறுதி கூறமுடியாது. தவருமல் ஊறுதல் மணற் கேணிக்குள்ள சிறப்பு. அது கிடக்கட்டும்.