பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அப்படி நிற்கவில்லை. கருத்தாக மலர்ந்தது. காலத் தால் வாடாத கருத்தமாக மலர்ந்தது. இதோ அவர் பாட்டு: = தொட்டனத் தாறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. ' என்று சிற்றுரை யாற்றினர் பேராசிரியர். 'தெரியுமே இந்தக் குறள். பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன். அன்று படித்தேன். ஆல்ை, பொருள் ஆழம் தெரியவில்லை. இன்று கண்டேன். அக் குறள் காட்டும் கருத்தின் ஆழத்தை இங்கே கண்டேன். ■ 'மணற்கேணி ஊறும் என்பது உறுதி: தோண்டிய அளவிற்கு ஏற்ப ஊறும் என்பதும் உறுதி. இவ்வுண்மையை இன்று கேரில் கண்டேன். அதேபோல், கற்ருல் அறிவு ஊறுவது உறுதி. அந்த ஊறலும் கற்ற அளவைப் பொருத்தது என்பதைப் படித்திருக்கிறேன். அதன் பொருட்செறிவ்ை இன்று: உணர்கிறேன்.” இதல்ைதான் கல்லூரிக்குச் செல்லும் என் தம்பியிடம் கல்வி, கல்வி என்று வற்புறுத்துகிறேன். 'கிணறு தோண்டும் வேலையையும், பயிரிட்டு விளைவிக்கும் வேலையையும் எங்களிடம் - பெரியவர் களிடம் - விட்டுவிட்டு, கல்லூரிக்குப் போய் சேர்ந்து இருப்பது போல், ஊர் விவகாரங்களையும் எங்களிடம் விட்டு விட்டு, படிப்பில் மூழ்கி இருக்கச் சொல்கிறேன் தம்பி கண்ணனே. அவனுக்கும் அப்படி இருக்கவே.