பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஆசை. பட்டினங்களிலே இருக்கிற நீங்கள், அவனே இதற்கு அதற்கு என்று இழுக்காமல் விட்டு விட்டால், கன்ருகப் படித்து, நிறைந்த அறிவு பெற்று விடுவான். அப்படி விடக்காணுேமே! மற்றவர்கள் பிள்ளேகளை ஊர்வம்புகளில் முன்னே தள்ளிவிட்டு அல்லவா, உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள்...' இப்படி அங்கலாய்க்கத் தொடங் கிர்ை, கல்லான். ‘'சரியாகச் சொன்னிர்கள். கல்வி என்பது ஒருமனப்பட்டு, முழுமனப்பட்டு, ஆழ்ந்து, பாடு பட்டுப் பெறவேண்டிய ஒன்ருகும். பிற ஈடுபாடு களுக்கு இடையில் கல்வியைப் பெறுவது அரிது.” o 'வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப் பெருக்கும் கலேப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் விழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார்' என்று பாரதியார் கூட முழங்கியிருக் கிருர். எல்லாச் சீரமைப்புக்கும் வளத்திற்கும் உயர் விற்கும் அடிப்படை அறிவே. இதை உணர்ந்த வள்ளுவப் பெருங்தகை, அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் என்று அறுதியிட்டுச் கூறிச் சென்ருர்' என்று திசை திருப்பினர் பேராசிரியர் நாயகம்.