பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லான் நல்லவர் மட்டுமல்ல; அறிவாளி,. கடமையுணர்ச்சியுடையவர். பொறுமையுடையவர். ஒரு நாள் நல்லான் நூலொன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அவரது ஆறு வயது மகன் அடைக்கலம் அங்கு வந்தான். அவன், செல்லக் குழங்தை. அப்பாவின் கையிலிருக்கும் நூலே வெடுக் கென்று பறித்தான். அப்போது, நூல் மூடிக் கொண்டது. அட்டையைப் பார்த்தான். படமொன்று: கண்ணில் பட்டது. என்ன படமென்று கேட்டான். உலகப்படம் என்று கூறினர் கல்லான். சிறுவன் மனத்தில் ஆழப் பதியவில்லை. எங்கோ ஓரிடத்தில் நூலைத் திறந்தான் அடைக்கலம். "அப்பா இங்கே என்ன இருக்கிறது: படித்துக் காட்டுங்கள்' என்ருன்.