பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கல்லான் முகம் மலர்ந்தது. படித்தார், அடைக் கலம் காட்டியதை. இதோ அது : "இனிய வுளவாக இன்னத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' = - இக் குறளைப் படித்து முடித்தார். சிறுவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆயினும் அவன் விடவில்லை. "அப்படி யென்ருல் என்னப்பா?’ என்று கேட் ட்ான். நல்லான், 'இப்போது விளங்காது; போ’ என்று அவனை ஒதுக்கிவிடவில்லை. அதுவே நல்ல சமயம் என்று அடைக்கலத்துக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத் தார். அதன் சுருக்கம் வருமாறு: 'தம்பி வாழைப் பழம் தெரியுமா?” == 'கல்லா தெரியுமே! எனக்குப் பிடிக்குமே! நேற்று கூட அம்மா கொடுத்தார்களே! இன்றைக்கும் சாப்பாட்டின்போது கொடுப்பதாகச் சொல்லியிருக் கிருர்களே அம்மா? "அப்போ, உனக்கு வாழைப் பழம் விருப்பம். அப்படித்தானே? - - "ஆம் அப்பா, நீங்களும் வாங்கி வரப் போகிறீர் .களா?” 'அம்மா, வாங்கி வராதபோது நான் வாங்கி வருவேன். அது கிடக்கட்டும். இப்போது வாழைக் காய் கொடுத்தால் என்ன செய்வாய்?