பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 அது எனக்கு எதற்கு அம்மாவிடங்தான். கொடுக்க வேண்டும்!” " . "ஏன்? அதை நீயே எடுத்துக்கொள்வதுதானே?” பழத்தைச் சாப்பிடலாம். காயை அப்படியே தின்ன முடியாதே! தோலைச் சீவனும். துண்டு போடணும். வேக வைக்கணும். சமைக்கணும்.' 'சரி சரி! நல்லா சொன்னய் கண்ணு. பழமும் காயும் இருந்தால், பழத்தையே எடுத்துக் கொள்வாய். காயை விட்டுவிடுவாய். சரிதானே! அதைப்போல், தித்திப்புப் பேச்சும் கசப்புப் பேச்சும் கேட்டால் எது பிடிக்கும் உனக்கு?’’ # = o 'தித்திப்புப் பேச்சே." 'கசப்புப் பேச்சு பிடிக்காதா?” 'பிடிக்காது.” "இதையே சொல்லுகிறது இந்தப் பாட்டு, பழம் இருக்க, அதை விட்டுவிட்டுக் காயைத் தேடுவது தப்பு. அதைப்போல் தித்திப்பான பேச்சை விட்டு விட்டு, காரமாய் பேசுவதும் தப்பு.” ஆமாம்ப்பா ஆமாம். கல்லா தெரியுது. அதோ கூட்டாளிகள். விளையாடப் போகிறேன். அடைக் கலம் ஆடப் போய் விட்டான். நல்லான் படிக்கப் போகவில்லை. பெரிய சங்கதி யைச் சிறிய குழந்தைக்குச் சொன்னேமே! அவனுக்குப் புரிந்ததோ என்ற சிங்தனேயோடு, சிறுவர்கள் விளையாட்டையே கவனித்துக் கொண்டிருந்தார்.