பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கல்லான் மகன் அடைக்கலம் வல்லான். விளையாட்டில் அவனுடையதே அதிகாரமெல்லர்ம்.. மற்றவர்கள் அவனுக்கு அடங்கிப் போகவேண்டும். வாய்க்கு வங்தபடியே பேசுவான். இதுவே அடைக்கலத்தின் இயல்பு. இன்ருே. அதற்கு மாருக கடந்தது. ஒரு மணி நேரம் கவனித் தார் கல்லான். தன் மகனிடமிருந்து கடுஞ்சொல் ஒன்றும் வரவில்லை. அட்டகாசம் ஏதும் இல்லை. மணி நேர விளையாட்டும் இனிமையாகவே ஒடிற்று. குறள் சிறுவன் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. போலும் என்று எண்ணி மகிழ்ந்தார் கல்லான். கற்க கசடற கற்பவை; கற்றபின் * நிற்க அதற்குத் தக. என்ற குறள் மின்னிற்று அவர் சிங்தையில். ஆம், அடைக்கலம், பிழையறவே புரிந்து: கொண்டிருக்க வேண்டும். இல்லையென்ருல், பிடிவாத குணமும் காட்டுக் கூச்சலும் காட்டும் இவன் இன்று இவ்வளவு இனியவகை இருப்பான கற்றபடி கிற்கிருனே. அது எவ்வளவு காலத்திற்கென்று. பொறுத் திருந்து பார்ப்போம், என்று ஏக்கத்தையும். கலந்து கொண்டார் நல்லான். பார்த்தார்.சிறப்பாக, உன்னிப்பாகப் பார்த்தார். அடைக்கலத்தின் நடவடிக்கைகளே உற்றுப் பார்த் தார். விளையாட்டிலும் பார்த்தார். இரு நாள் கோக்கினர். பல நாள் விழிப்போடு கண்காணி த்தார். அடைக்கலத்தின்போக்கிலே மாற்றத்தைக் கண்டார்.