பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 பல நாள் கண்டார். 'கற்றபின் கிற்க அதற்குத்தக என்ற அறிவுரைக்கு இலக்கியமாக, அடைக்கலம் இருப்பதைக் கண்டார். பூரித்தார். o ஒரு முறையே கேட்டான் அடைக்கலம். ஆயினும் அவாவிக் கேட்டான் அக் குறளே. விரும்பிக் கற்றது, விளங்கி உதவியது; கேட்டபோது மட்டு மல்ல; பலபோதும் உதவிற்று. அடைக்கலத்தின் குணத்தையும் போக்கையும் செம்மைப்படுத்த அப் போதும் உதவிற்று. அடுத்தும் உதவிற்று. ஒரு முறை கற்றது, பன்முறை உதவிற்று. ஆம். வள்ளுவர் வாய்மொழி பொய்யா மொழியே என்று மகிழ்ந்தார். ஒருமைக்கண், தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. என்று தன்னையும் மீறி மெல்ல ஒப்புவித்தது, கல்லான் வாய். H =