பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 முயன்ருர். இளங்கோ, இனிமையாகக் கூறி, பக்குவ மாக அழைத்துப் போய், முன் வரிசையில் உட்காரச் செய்தார். சிறிது நேரத்தில் பேரவை தொடங்கு முன், அவ் வரிசையில் மேலும் சிலர் அமர்ந்தனர். இல்லே, அமர்த்தப்பட்டனர். அவையில் அனைவரும் அறிவாளிகளே. நுண் மாண் நுழைபுலம் உடையவர்களே. ஆயினும் அத்தனே பேரும் முன் வரிசையில் இருக்க முடியாது. அவைக்கேற்ற, தன்னடக்கமும் இன்சொலும் உடைய வர்களே முன்னணிக்குப் பொருத்தமானவர்கள். 'பெரும்பாலானவர்கள், தத்தம் அறிவை இதிலும் அதிலும் செலுத்தி, தீமையை அறுவடை செய்து துன்பப்படுகிருர்கள். மெய்யறிவுடையவர் களோ, கண்டவற்றின் பின்னே அறிவைச் செலுத்துவ தில்லே, எது, தமக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் கன்மை பயப்பதோ, அவ்வழியே சிந்தனையை ஒட விட்டு, ஒளி விடுகிருர்கள். சென்ற விடத்தாற் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. என்னும் குறளே படித்தவர் மட்டுமல்ல அடைக்கலம்; அவர் அதை கன்ருகக் கற்றவர்; அவ்வழி நிற்பவர்; பணிவுடையவர்; இனிய சொல்லினர்; எனவே அவையத்து முந்தி இருக்கத் தக்கவர்,” என்று விளக் கினர் செங்தாமரை. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.