பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 என்னும் குறளினே உணர்ந்து கடந்து விளங்குபவர் அடைக்கலம் என்று நானும் கேள்விப் பட்டிருக் கிறேன்: அடக்கம் எங்கோ அமரரோடு சேர்ப்பது இருக்கட்டும்; அது, இங்கே, பேரவையில் முக்தி யிருக்கச் செய்கிறது. அடக்கமில்லாதார் துன்ப இருளில் உழல்வதை அடிக்கடி காண்கிருேம் என்று குறளே விளக்கியபடி, ஒத்து ஊதினர் இளங்கோ. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். என்ற குறளே எத்தனையோ பெற்ருேர் படித்திருக் கிருர்கள். எத்தனையோ பேர் அதைப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிருேம். நல்லானைப் போன்று, அதைப் பின்பற்றி, வினைத்திட்பத்தோடு செயலாற்றி, மகன் அடைக்கலத்தை, அவையத்து முந்தியிருக்கச் செய்யும் பெற்ருேரல்லவா கற்ருேர்? மற்ருேர், பதிவு காடாக்களே, என்று மதிப்பிட்டார் மதி. பேரவை தொடங்கி விட்டது. தனியுரையாடல் கின்று விட்டது. மூன்று மணிகளுக்குப் பின், சிதம்பரங்கரிலே, திரு. வி. க. வீதியிலே, அன்னையார் ஒருவர், திண்ணை யில் உட்கார்ந்து, வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிரு.ர். எதிர் வீட்டு எழிலி தன் வீட்டிற்குள் நுழை, வதைக் கண்டார். "ஏன் எழிலி, ஒரு கொடி இப்படி வங்துபோ என்று கனிவோடு அழைக்கிருர், தள்ளாத அம்மையார். |