பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உருவான அவரை மெல்ல, முன் வரிசையில் வங்து அமரச் செய்துவிட்டனர். 'அடைக்கலம் அறிஞர் ஏறு என்றனர் சிலர். "அது மட்டுமா, அமைதியின் திருவுருவம்' என்றனர் சிலர்.

  • அருளுருவமாயிற்றே என்றவர்கள் உண்டு.

“இத்தனைக்கும் மேலாக அப்பழுக்கில்லாத சான் ருேர்’ என்று போற்றியவர் பலர். பெரியப்பாவைப் பற்றி, இத்தனையையும், இன்று, என் காதாலேயே கேட்டேன் பாட்டி என்று பூரித்தாள் எழிலி. மூதாட்டி மகிழ்ச்சி அருவியில் குளித்தெழுந்தாள். 'இப்படி வாடி செல்லம். உன் அப்பனும் அப்படியே என்று எழிலியைக் கட்டித் தழுவி, உச்சி மோங்து, திருஷ்டி கழித்தாள் மூதாட்டி. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனச் சான்ருேன் எனக்கேட்ட தாய்' -என்பது பொய்யா மொழி. மகனேப் பெற்றபோது தாய்க்கு மகிழ்ச்சி. இது இயற்கையன்ருே? அம் மகன், வளர வேண்டிய முறையில் வளர்ந்து, கற்க வேண்டியவற்றைச் செம்மையாகக் கற்று, அடங்கி, கல்வழி கடந்து, சான்ருேன் எனப் பெயரெடுக்கக் கேட்கும்போது, அத் தாய்க்கு மேலும் மகிழ்ச்சியாம். கொள்ளை மகிழ்ச்சியே. இக் குறளுக்கு ஆழம் இப்போது தெரிந்தது பாட்டி’ என்று பாட்டிசைத்தாள் எழிலி.