பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிகொண்டார், வானூரின் காட்டாண்மைக் காரர். அவர் மட்டுமல்ல, அவரது முன்னேர்கள் அவ்வூரின் நாட்டாண்மைக்காரர்கள். எத்தனே தலைமுறைகளாக அங்தக் குடும்பம் காட்டாண்மைக் காரக் குடும்பம் என்பது யாருக்கும் தெரியாது. அக் துணை நெடுங்காலமாக, முடி கொண்டார் என்ற சிறப்புப் பட்டத்தோடு அக் குடி வாழ்ந்து வருகிறது, வானூரில். அவ்வூரிலும், அக்கம்பக்கத்தில் பல காத தூரத்திற்கு அப்பாலும் அவரது நாட்டாண்மைக்குக் குறுக்கே மூச்சுவிடுவோர் இல்லை. வாழையடி வாழை யாக வந்த ஆண்மைச் சிறப்போடு, செல்வச் சிறப்பும் சேர்ந்திருந்தது, முடிகொண்டார்க்கு. ஒரு மாலைப் பொழுது, முடிகொண்டார், சாய்வு காற்காலியில் அமர்ந்திருந்தார். குறிப்பாக நோய் ஒன்றுமில்லை. ஆயினும், ஒருமணி நேரம் காலேப்