பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பிடித்து உருவாவிட்டால், தூக்கம் வராது என்கிற கற்பனே கோய் அவருக்கு வந்து விட்டது. ஆகவே, ஆள் ஒருவர். அவரது கால்களே, தன் பலங்கொண்ட மட்டும் பிடித்து உருவிக் கொண்டிருந்தார். அவ்வேளை தங்தியொன்று வந்து சேர்ந்தது. வாங்கினர் முடி கொண்டார். தங்தியைக் கொண்டு வந்தவருக்குப் படிக்கத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்று பதில் கிடைத்தது. காரியக்காரரை அழைத்து வரச் சொன்னர். அவர் அகப்படவில்லை. பல பேர் தேடினர். பின்னரே தெரிந்தது, அவர் எசமானருக் குத் தெரியாமல் தேவனுர் சென்றிருப்பது. ஊர் மணியக்காரர், சமாபங்திக்குச் சென்றிருந்தார். அக்கம் பக்கத்து ஊர்களில் படிக்கத் தெரிந்தவர்கள் இருங் தால் அழைத்து வரச் சொன்னர். அலேந்து பார்த் தனர். அன்று பார்த்து, தங்தியைப் படிக்கக் கூடியவர் ஒருவரும் அகப்படவில்லை. ஒரே எரிச்சல் முடி கொண்டாருக்கு. காலே உருவிக் கொண்டிருந்த உலகநாதன், 'மாரியாத்தா, தாயே! தங்தி இன்ன, ஆபத்துக்குதான் வரும் என்று கேள்வி. அய்யாவுக்கு ஆபத்து இல்லாம காப்பாத்து தாயே! நல்ல கடா வெட்டி, கூழ். ஊத்துகிறேன் தாயே என்று உரத்து வேண்டிக் கொண்டார். - - எசமானர் தன் ஆளின் பக்தியை மெச்சினர். அதே நேரத்தில் அச்சமும் கொண்டார். வங்திருக் கிறதோ தங்தி: படிக்கிறதுக்கு யாரைத் தேடினலும் அகப்படவில்லை. எப்பவும் நிழல் மாதிரி இருக்கிற காரியக்காரர் கூட, இன்றைக்குப் பார்த்துக் காணுமற்.