பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31

 போய் விட்டாரே! சகுனமெல்லாம் எப்படியோ இருக்கிறதே! நல்லதற்கா இது என்று கலவரப்பட்டார் முடிகொண்டார்.

தாமும் வேண்டிக் கொண்டார். மாரியத்தாளை மட்டுமல்ல, வானூரிலுள்ள மற்ற தெய்வங்களையும் வேண்டிக் கொண்டார். சந்தனக் காப்பு செய்வதாக வேண்டிக் கொண்டார்.

முடிகொண்டாரின் இல்லத்தரசிக்கு தந்தி வந்தி ருப்பது தெரிந்தது. எங்கிருந்து என்று கேட்டார். படித்தால்தானே தெரியும் என்றார், கொண்டார்.

வஞ்சியூரில் படித்துக் கொண்டிருக்கும் தன் பேரனுக்கு ஒன்றும் ஆபத்தில்லாமல் இருக்க வேண்டுமென்று, அவரும் பல தெய்வங்களை வேண்டிக் கொண்டார். பெரிய படையல் போடுவதாக, மூதாட்டியின் வேண்டுதல்.

இப்படி பலரும் தந்தியைப் படிக்க முடியாது கலவரப் பட்டுக் கொண்டிருக்கும்போது, சைக்கிள் ஒன்று வந்து நின்றது. அதை நிறுத்திவிட்டு, இருவர் வீட்டை நெருங்கினர்.

"யாருக்கு என்னடா ஆயிடுத்து, கண்ணு, இப்படி அகாலத்தில் திடுதிப்பென்று வந்து சேர்ந்திருக்கே!” என்று பதட்டத்தோடு, பேரனைக் கேட்டார் முடி. கொண்டார்.

எல்லாரும் நன்றாக இருக்கிருர்கள் தாத்தா. இதோ இவன் என் கல்லூரி நண்பன். ரொம்ப வேண்டியவன். இவன் புதிய சைக்கிள் வாங்கினான். அதில் ஏறிக்கொண்டு எங்காவது வெளியூர் சென்று