பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 'மெளனகுரு, தாத்தா.

  • அடே, பேரோ மெளனகுரு. பேச்சோ பிரமாதம். இன்னும் என்ன சொல்கிருர் வள்ளுவர்? என்று கேட்டார், முடிகொண்டார்.

அவர் எவ்வளவோ சொல்கிருர் தாத்தா. அவ்வளவையும் நான் இன்னும் படித்து முடிக்கவில்லை. அத்தனே படித்த பிறகும், விளங்கும் பொருள் ஆழம், அனுபவத்தின் பரப்பிற்கும் ஆழத்திற்கும் தக்கபடி தாத்தா. ஆல்ை இப்போது ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிவிடுகிறேன் தாத்தா! -- 'மருத நாட்டார் போரில் ஈடுபட்டிருந்த காலம், நீங்கள் உதவி செய்த காலம். எனவே, அப்போது அவர்கள் காட்டில் விளைச்சல் குறைவு. போர் முனைக்கோ அதிகப்படியான உணவு தேவை. நீங்கள் இங்கிருந்து உணவு வாங்கி அனுப்பியிராவிட்டால், ஊரில் இருந்தவர்களும் பட்டினியால் துன்பப் பட்டிருப்பார்கள், களத்திலிருந்தவர்களும், கணையால் மடியாத வீரர்களும், பசியால் மடிந்திருப்பார்கள். நெருக்கடியான காலத்தில் செய்த சிறிய உதவிகூட பெரியபெரிய நன்மையைக் கொடுக்கும். நீங்கள் செய்தது உணவுப் பொருள்கள், மருத நாட்டாருக்கு, தேவைப்பட்டபோது, தேவைப்பட்ட அளவு, விற்க -ஏற்பாடு செய்ததே. அந்த ஏற்பாடு எத்தனை உயிர்களைக் காத்து, வெற்றி தேடித் தந்தது என்பது அவர்களுக்கல்லவா தெரியும். ஆகவே சால்புடைய அவர்கள் பாராட்டுகிருர்கள். -تھا காலத்தி ற்ைசெய்த நன்றி சிறிது.எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. *