பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 38 வயதில் கற்கத் தொடங்கவேண்டும் என்பது தெளிவு. ஆனல், இளமையில் பெறத் தவறிய கல்வியை முது மையில் தேடக்கூடாதென்பதோ தவறு.

பத்துப் பன்னிரண்டு வயதில் கோஞ்சாகை இருந்தவன், வாலிபத்தில் முறையான உடற்பயிற்சி செய்து, நல்ல உடல் வலிமை பெறக் கூடாதா: முடியாதா தாத்தா?

பெரியவரான பிறகு, முறையாக, அளவாக வாழ்ந்து, நல்ல உடல் நலத்தோடு இருக்கிறவர்கள் இல்லையா தாத்தா? அதைப்போல், சிறுவயதில், கல்வி வாடையே படாதவர்கள் கூட, வாலிபத்தில், ஏன், அப்புறம் பெரியவர்களான பிறகும், படித்து கல்வியறிவு பெறலாம் என்று அறிந்தவர்கள் கூறு கிருர்கள், தாத்தா” என்ருன் பேரன். யோசித்துப் பார்த்தால், அதிலும் நியாயம் இருக்கிறது. இளமையிற் கல்வி, கன்ருக உழுது வைத்த பூமியிற் பயிரிடுவது போல் எளிது. ஆனல் சில பயிருக்கு முறை வேறு. சிலவகைப் பயிருக்கு, பயிருக்குப் பயிர் இடைவேளை, கான் கைங்து மாதங்கள் விட வேண்டும். அத்தகைய பயிருக்கான பூமியை, கன்ருகக் காய்ந்து அழுங்திய பிறகு உழுவதால், பயிர் ஏருமல் போவது இல்லை. 'கம் ஊரில், வயது வங்தவர்களும் படித்துக் கற்றுக் கொள்ள ஏதாவது செய்யலா மென்றே தோன்றுகிறது. ஊர் மக்கள் சொல்வதைக் கேட்பார் களா? அதைப் பற்றியே தயங்குகிறேன். சிறுவர் களைப் படிக்கவைக்கவே, தயங்குகிருர்கள். "தலே