பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 எழுத்து நல்லா இருந்தா, படிக்கற சாதியில் பிறக் திருக்க மாட்ட்ோமா என்பார்களே. அதற்கு என்ன பதில் சொல்கிறது?’ என்று கேட்டார் தாத்தா. 'இந்தக் கேள்விக்குப் பதில், அந்தப் பெரியவரே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சொல்லிவிட்டார் தாத்தா. பொய்யா மொழியார்-அதாவது, வள்ளு வர் சொல்லுகிருர், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். சேற்றும் சளைக்காமல், இளேக்காமல், விடாது முயல்பவர், முன் வழிவந்த குறையையும் தீமையையும் ஒதுக்கித் தள்ளி வெற்றி காண்பார்கள்” என்பது வள்ளுவர் கருத்து, தாத்தா. இன்ைெரு குறளும் கினேவிற்கு வருகிறது. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும். 'எவ்வளவு பாடுபடுகிருேமோ அவ்வளவு பலன். உழைப்பிற்கேற்ற ஊதியம். தெய்வம், ஒருவனேப் படிக்காத குடும்பத்தில் பிறக்க வைத்து விட்டாலும் அவன் வருந்தி முயன்று கற்ருல் கல்வி பெறலாம். பெருங்கல்வி பெறலாம். ஆகவே, வயது வந்தவர் களுக்கும் எழுத்தறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள் தாத்தா' என்று வேண்டினன் பேரன் பேச்சிமுத்து. "செய்யனும். எப்படிச் செய்யனும் என்றே இந்திக்கிறேன். ஆம். ஒன்று தோன்றுகிறது. கன்னிலமே ஆயினும், நெடுநாள் காய்ந்தபின், ஈரப் படுத்தி அல்லவா உழுதல் வேண்டும்? அதுவும்