பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அங்கிலத்தில் இடப் போகும் பயிருக்கு ஏற்ப, சேடையோ புழுதி உழவோ செய்ய வேண்டும். 'சிறுவர் பள்ளிக்கூடமும் இல்லாத நம் ஊரில். வயது வந்தோர் படிப்பிற்குப் பக்குவப் படுத்துவது எப்படி? அதிலேயே கருத்தாக இருந்தால் வழி: தெரியும்,' என்ருர் முடிகொண்டார். - "எனைத்தானும் கல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.” என்று வள்ளுவர் கூறுகிருர். மாங்தர், ஏட்டி விருந்து கற்பது போல, நல்லவர், சான்ருேர், பட்டறிவு மிக்கோரின் வாய்ச் சொற்களைக் கேட்டு நன்மையடைய வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து. எப்போதும் கல்லதையே கேட்டால், அ தன் விளைவு மிகுந்த பெருமையாகக் குவியும் என்பது குறள் முடிவு...” பேச்சிமுத்து இப்படி உரைத்தான். உரைக்குக் குறுக்கிட்டார், முடிகொண்டார். “அதிலென்ன ஐயம். பெரியவர்களோடவே இருந்து பண்பட்ட மரியாதையான சொற்களேயே கேட்டுப் பழகியவர்களிடம், மறங்துங்கூட கொச்சைச் சொற்களைக் கேட்க முடியாது. மாருக, பண்பட்டவர் களிடமிருந்து நெடுந்துாரம் விலகி இருப்பவர்கள், நல்லவர்களது கன்மொழிகளைக் கேட்டுப் பழகாத வர்கள்-பேச்சுக்குப் பேச்சு, கொச்சையாகப் பேசு வதைப் பார்க்கிருேமே” என்ருர் தாத்தா. இதையே வள்ளுவரின் குறட்பாவால் சொல்லு - கிறேன். கேளுங்கள் தாத்தா.