பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 'பிழைத்துஉணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்து - உணர்ந்து ஈண்டிய கேள்வி அவர்' என்பது அந்தக் குறள். கன்மொழிகளைக் கேளாத காதுகள், ஒலி கேட்கும் காதுகளே ஆயினும், அறிவு கேட்காத செவிடுகள் தாத்தா. - கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி என்று குறள் சுட்டிக் காட்டுகிறது. “ஆமாம். உலக வழக்கே கல்வி கேள்வியிற் சிறங்தவர் என்பதே. 'பொருள்களைக் காணும் ஆற்றல் இருந்தும் படிக்கத் தெரியாத கண்கள் புண்களாகக் கருதப் படுவது போல், ஒலிகளைக் கேட்கும் ஆற்றல் பெற்ருலும், கன்மொழிகளை, நுட்பமான பொருள் களேக் கேட்டறியாத காதுகள், செவிட்டுக் காதுகளே! 'அடி பாதாளத்தில், சுரங்கத்தில் பதுங்கிக் கிடங்த தங்கத்தைத் தோண்டி, பிரித்துப் பக்குவப் படுத்தி, தனியாக எடுத்து, பின்னர் முறைப்படி புடம் போட்டு, தங்க பஸ்பம் செய்து, அதோடு எங்கோ எட்டாத தூரத்தில் மலைக்கொம்பில் தோய்ந்த தேனேக் கொண்டு வங்து, அ ள வ றி ங் து சேர்த்து உட்கொள்வது போன்றதே, கற்றறிந்த புலவர், கேட்டறிந்த சான்ருேர் சொற்களைக் கேட்டு மகிழ்வதும்; கினேங்து வழிபடுவதும்' என்று அறிவுரை பகர்ந்தார், முடிகொண்டார்.