பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆமாம், தாத்தாl இதை உணர்ந்தே, செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்று குறட்பா கூறுகிறது' என்ருன் பேரன் பேச்சிமுத்து. --- 'இதெல்லாம் சரி, கண்ணு! வயது வங்தவர் களுக்கும் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிக்க வேண்டுமென்ற ஆசை அவர் களுக்கும் ஏற்பட வேண்டும். அங்த ஆசை ஆருத ஆர்வமாக வேண்டும். அதற்கு என்ன வழி, சொல்லு' என்று கேட்டார். 'கற்றிலன் ஆயினும் கேட்க, அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்ரும் துணை' நம் பெரியவர்கள் கற்காவிட்டாலும், கல்லதைக் கேட்டு அறிவுபெற ஏற்பாடு செய்யுங்கள் தாத்தா. அக் கேள்வியறிவு அவர்களுக்குப் பற்றுக் கோடாக அமையும். அக் கேள்வி, மக்களுக்கு அறிவூட்டுவதாக மட்டும் கிற்காமல் ஆர்வ மூட்டுவதாகவும் அமைக் தால், அது, தாமே படித்தறிய வேண்டும் என்னும் ஆவலே, ஆர்வத்தைத் தூண்டிவிடும். அது முதல்படி. அதை ஏற்பாடு செய்யுங்கள் தாத்தா” என்று. வேண்டிக் கொண்டான் பேச்சிமுத்து. “நல்ல கருத்து,முத்து நல்ல தொடர்ந்த கேள்வி, சுய கல்விப் பயிருக்கு, கிலத்தை உழுது பண்படுத்து வது போல் அமையும். இனி, வாரா வாரம், நல்லவர் ஒருவரைக் கொண்டு, பொதுமக்களுக்காகச் சொற்