பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிகொண்டார் செய்து கொடுத்த ஏற்பாட்டின் படி, வாரங்தோறும், காவலர் பாரதி குறளுரை ஆற்றினர். தொடக்கவுரை இதோ: செடி முளைக் கிறது. வளர்கிறது; பூக்கிறது; பிஞ்சு விடுகிறது: காயைக் கணிய வைக்கிறது; கனியை உதிர்த்து விடுகிறது; பருவம் முடிந்ததும் பட்டுப் போகிறது. செடியின் வாழ்க்கை பருவ வாழ்க்கை. அதோ மாமரம்! கொட்டையிலிருந்து முளைத் தது. செடியாக வளர்ந்தது. மரமாகக் கிளேத்தது. சில ஆண்டுகளுக்குப் பின் பூத்தது. பிஞ்சு விட்டது. காய் காய்த்தது. கனி கொடுத்தது. பல்லாண்டு கனிக் கொடை வழங்கியது. பின்னர், மெல்லப்பட்டுப் போயிற்று. மரம் பருவப் பயிரல்ல; பல்லாண்டுப் பயிர். மனிதன் பருவப் பயிரல்ல; பல்லாண்டுப் பயிருமல்ல; ஆயிரங் காலத்துப் பயிர். மனித வாழ்க்கை, அறிவால் செப்பனிடப்படும் வாழ்க்கை.