பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தனி மனித கிலே; இல்லறத்தான் கிலே; 5ற்குடி மகன்-சமுதாயத்தின் உறுப்பினன்-நிலை ஆகிய மூன்று நிலைகளும் ஒவ்வொருவர்க்கும் உண்டு. மூன்று நிலைகளிலும் முறைப்படி செயல்பட வேண்டும். பயனுள்ளபடி செயல்பட வேண்டும். ஒரு கிலேக்கு பிறிதொரு நிலை முரண்படாதபடி செயல்: படவேண்டும். அது மட்டுமல்ல, ஒன்ருேடொன்று இணைந்தும் செயல்பட வேண்டும். அப்போது: தனக்குத் தானே போராடாத அமைதி நிலவும். தன்னைத் தானே பிய்த்துக் கொள்ளாத கன்னிலை கனியும். 'உழைப்பதற்குப் போதுமான உடல் உரம் வங்ததும், தொடங்கி, ஆடிஓடி பாடுபட்டு, எதையோ சம்பாதித்துச் சாப்பிட்டு, குடும்பத்தைக் காத்து. வருவதற்கே, காலமெல்லாம் தீர்ந்தது” என்பதே. மாங்தரில் பலருடைய வாழ்க்கை. அவர்கள், வாழ்க் கையை, எட்டி நின்று, சிங்தனேயால் மதிப்பிட இயலா தவர்கள். | இதற்கிடையில் ஒரு சில ஞான ஞாயிறுகள் உண்டு. வாழ்க்கையில் குறிக்கோள் என்ன? வாழ்க்கை முறை எது? வாழ்க்கையில் கருதவேண்டி யவை எவை? உதறிவிட வேண்டியவை எவை? கொள்ள வேண்டியவை எவை? தள்ள வேண்டியவை. எவை? தனக்காக ஆற்றவேண்டிய கடமைகள் எவை. எவை? பிறர்க்காகச் செய்யவேண்டிய பணிகள் எவை. எவை? இன்ைேரன்ன அடிப்படைக் கேள்விகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, பல கோணங்களிலிருந்து,