பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கருதிக் கருதித் தெளிந்து தெளிவு பெற்று, அவற்றை யெல்லாம் தொகுத்து, முறைப்படுத்தி உரைக்கும் ஆன்ருேர் சிலர், அந்த ஞான ஞாயிறுகள். அவர்கள் வெவ்வேறு காலத்தவராகலாம்; உலகின் வெவ்வேறு காட்டினராகலாம்; வெவ்வேறு மொழியினைக் கையாள லாம். ஆயினும் என்ன? நேற்று நமக்குக் காட்சி யளித்த ஞாயிறு வேறு. இன்று தோன்றும் ஞாயிறு: வேரு? கிணற்றின் அடிவரை மூழ்கி, தரையைத் தொட்டு, பிடி மண் அள்ளி வருபவன் யாரானல் என்ன? யார் அள்ளிலுைம், கிணற்றின் ஆழத்தில் பொருந்தியிருப்பது ம ண் ணு ைல் மண்ணுகக் கிடைக்கும். மணலானல் மணலாகக் கிடைக்கும். அடியில் என்ன உள்ளதோ அதையே அள்ளிவர' முடியும். அடிவரை சென்று அள்ளி வரக் கூடியவன், இங்காட்டாவனயின் ஒன்றும், பிற காட்டவயிைன் மற்ருென்றும் கிடைக்காது. மூழ்கி எடுப்பவனுடைய மொழிக்கேற்ப, மாறுவதில்லை அவன் கையில் கிடைப்பது. இவ்வாறே உலகச் சான்ருேர்கள், கல்வழிகாட்டிகள், எம் மொழியில் . பேசினும், கருத்தினே வெளியிட்டாலும், எங் காட்டில் வாழ்ந்து, ஆழ்ந்து, அடிப்படைகளைப் பற்றி சிந்தித்தாலும் ஒரே வகையான கருத்துக்களை வெளியிடுவார்கள்.எத்துணை ஆழத்திலிருந்தாலும் அடியைத் தேடிக் கண்டவர் களாகையால், உண்மையை உள்ளவாறே உணர்ந்த வர்களாகையால், அவர்கள் கூறும் கல்லுரைகளில் அநேகமாக ஒருமைப்பாட்டினைக் காணலாம். இவ்: வொருமைப்பாடு ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பி’