பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அடித்ததால் விளைங்ததல்ல. உள்ளது ஒன்று: கிணற்றின் படுபாதாளத்தில் ஆழ அடியில்-உள்ளது ஒன்று. எனவே அடிவரை மூழ்கி, அள்ளுவோர் அனைவரது கைகளிலும் கிடைப்பது ஒன்றே. இவ்வுண்மையை உணர்வோம். யாரைப் பார்த்து யார் அறிவுரை கூறினர் என்னும் பொய்மான் வேட்டையில் காலத்தையும் கருத்தையும் இழக்க வேண்டாம். உலக நெறியாளர்களில் ஒருவர் நம் முன்னேராக இருந்தார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்தார். வள்ளுவர் என வாழ்ந்தார். உலகை உற்று நோக்கினர். மக்களினத்தைக் கூர்ந்து கவனித் தார். அவர்களது உள்ள உணர்ச்சிகளை ஊடுருவி, உணர்ந்தார். அவர்களது சிக்கல்களைப் பற்றிச் சிங்தித்தார். சிங்தனை சிறகடித்துப் பறந்தது. விண்ணிலும் வி ரி ங் த து. வாழ்வனைத்தையும் வரீளத்தது. முங் கிலேக்கும் வழி கண்டார்; காட்டினர். எல்லோர்க்கும் வழிகாட்டினர். பொது வழி காட்டினர். காலத்தாற் கறைபடாத உண்மைகளை உரைத்தார், 'பொய்யாமொழியார் என அழைக்கப் .படும் கம்மவர், வள்ளுவர். உண்மையின், நன்மையின் ஆழத்திலிருந்து, அள்ளிவரப்பட்ட கல்லுரைகளை, அறவுரைகளே, தம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் வெளியிட்டார் வள்ளுவப் பெருங் தகை; அவர் வெளியிட்ட கருத்துக் கோவைக்குப் பெயர் திருக்குறள். அது மூன்று பெரும் பிரிவுகளே உடையது. எனவே அதை முப்பால்