பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 உழுததும் உங்கள் உண்மைக் கைகள். விதைத் ததும் உமது தூய கரங்கள். கட்டதும் உங்கள் கற்கரங்கள். சேற்றில் கின்று, தேடித் தேடி களை யெடுத்ததும் உங்கள் பொற்கரங்கள் அன்ருே? கட்டிக் காத்தது யார்? நூறு நாட்களும் கட்டிக் காத்தது யார்? எங்கோ இருக்கும் காவல் துறை யினரா? இல்லை இல்லை, இங்கே இருக்கும் கண்ணனும் கர்ணனுமே! அறுத்து எடுத்ததுதான் யாருடைய உழைப்பு உங்கள் உழைப்பு. உழவர் உழைப்பு. உழவர் கொட்டிய வியர்வை, அவர் ஈதே உழைப்பு, அவர் வழங்கிய நேரம், அவர் பட்ட பாடு, அவர் ஏற்ற அல்லல், கெல் மணிகளாக, நம் பசி போக்கும் உணவாகக் காட்சியளிக்கின்றன. இவ்விளை பொருள்கள் இல்லையென்ருல் எப்படி உண்பேன் யான்? யார் யாரோ, எப்போதோ எதை எதை யெல்லாம் பற்றி கூறியவற்றையெல்லாம் கற்றுக் தெளிந்து சொல்ல, என்னேப் போன்றவர் வேண்டும். உண்மை, மறுக்கவில்லை. நானே, அதோ கோயிலில் வழிபாடு செய்கிருரே, குமரேச குருக்கள்,அவரோ, உணவின்றி எத்தனை நாள் எங்கள் நற்பணியை ஆற்றுவோம். ஊக்கம் நற்பணி யாற்ற உந்திலுைம், உண்ணுமை பணியாற்றும் ஆற்றலைப் பறித்து விடாதோ? நீங்கள் உழுது, விதைத்து, பயிரிட்டு, உணவ. வளித்து, எங்களையெல்லாம் காப்பாற்றுகிறீர்கள். உங்கள் உழைப்பே எங்களே வாழ வைக்கிறது."