பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 53 நீங்கள் மக்கள் இனத்துக்கு அச்சாணி. இதை வள்ளுவர் மொழியில் கேட்போம்: உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதுஆற்ருது எழுவாரை யெல்லாம் பொறுத்து உலகில் நடக்க வேண்டிய நற்பணிகள் பலப் பல. அப் பணிகள் இடையருது, முறையாக, செம்மையாக கடந்து கொண்டிருந்தால், உலக வாழ்க்கை அமைதி யாக நீளும். அப் பணிகள் தங்கு தடையின்றி நடக்க, ஒழுங் காக நடக்க, உரிய காலங்களில், உண்ண வேண்டும். உண்ணுவதற்கு, உணவுப் பொருள் கிடைக்க வேண்டும். எளிதில் கிடைக்க வேண்டும். எல்லோர்க் கும் வேண்டிய அளவு கிடைக்க வேண்டும். எல்லோர்க்கும் எளிதில் எப்போது கிடைக்கும்: விளைந்தால் கிடைக்கும். நிறைய விளைந்தால் கிடைக்கும். நிறைய விளைய என் செய்ய? பாடுபட, எங்கே பாடுபட நிலத்தில் பாடுபட, எங்கிலத்தில் பாடுபட? எல்லா நிலத்திலும் பாடுபட வேண்டும். நிலம், பலவகை. ஆயினும் அத்தனையும் விளையக் கூடியவை. இசைவாணரிடம், இசையைக் கேட்டு மகிழ் கிருேம். கழைக் கூத்தரிடம், கழைக் கூத்தை வியக்கிருேம். ஒதுவாரிடம் பண்ணேக் கேட்டு பண் படுகிருேம். வ. 4 _---