பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அவ்விதமே, ஒவ்வொரு வகை நிலம் ஒவ்: வொன்றை விளைவித்துத் தரும். விளையாத நிலமில்லை. அறியாத மக்கள் இருப்பதாலேயே, பயன்படாத நிலமென்று, சில தோன்றுகின்றன. எல்லா கிலமும் விளையும் என்ற நம்பிக்கையோடு பாடுபடவேண்டும். எந்தெந்த நிலத்தில், எங்தெந்தப் பயிர் செம்மை யாக விளையும் என்பதை, 菇 அறிந்து, பயிர் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, 'நமக்கு இல்லை; உண்ணவும் வழியில்லே; இதுவே நமக்கு வாய்த்தது: என் செய்வோம் நாம்? என்று சோர்ந்து செயல் அற்று இருத்தல் ஆகாது. இங்கே, ஒன்றை நினைவு கூருங்கள். அழகிய நற்குடிக் கன்னி, யாரைக் காதலிப்பாள் சும்மா கிடக்கும் காளையையா? காளையை அடக்கி, வெற்றி வாகை குடும் காளையையா? சும்மா சோம்பிக் கிடப்ப வனை எவளும் ஏறெடுத்தும் பாராள் அல்லவா? அதோடு நிற்பாளா நல்லாள் கில்லாள் நகைப் பாள். அவனுக்குத் துணைப்படு என்ருல்,ககைப்பாள். அங் நகைப்பு, வெகுளியிலும் ஆற்றல் மிக்கது: உறுதியானது. நிலமுமோர் கல்லாள். அவளும், சாதனையாள னுக்கே துணையாவாள். மற்றவர்களுக்கோ துணை யாகாள். செயல்வீரர் பவனிவரும் தன்முன், எவன வது சோம்பிக் கிடக்கக் கண்டால், அவன் மீது சினத்தைக் கூட எறியாள். நகைத்தே ஒதுக்குவாள். உழைப்பவனுக்கே விளையும். நுட்பமறிந்து உழைக் --உ-உமைப்பிற்கேற்ற அளவு விளையும். - -