பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 இவை நாமறிந்தவை. இதை ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்னரே உணர்ந்தார், கம் முதற்பாவலர், வள்ளுவர். அதை அழகுபட, கயம்பட, சுருக்கமாக இப்படிக் கூறுகிரு.ர். - இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் கல்லாள் நகும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று, "வறுமை வறுமை பஞ்சம் பஞ்சம் என்று சோம்பிக் கிடக்கிறவர்களேக் குத்துகிருர் வள்ளுவர். இதை உணர்வோம் நாம். உழைப்போம் நாம். நிலத்தின் இயல்பறிந்து, அதற்கேற்ற பயிரிடுவோம் காம். பெரும் விளேச்சல் காண்போம் நாம். விளைச்சல் பெருகவும் பொதுமறை உண்டா? என்று கேட்கிறது, என்னிடம் சேர்ந்துள்ள இச்சிறு வினத்தாள். உண்டு அன்பரே! உண்டு. உழ வேண்டும். ஆழ உழ வேண்டும். அதோடு கிற்கவில்லே பயிர்ப்பணி. பயிர் நன்கு வளர, ஏற்ற எரு விட வேண்டும. கன்ருக உழுததே போதும் என்று இருந்துவிடல் ஆகாது. + உழுதோம்; ஆழ உழுதோம்; எரு விட்டோம் ஏற்ற எருவிட்டோம். தக்க அளவு எருவிட்டோம். முடிந்ததா? அளவறிந்து ர்ேபாய்ச்சவும் வேண்டும் என்கிறீர்கள். அப்படித் தானே! ஏற்றுக் கொள்ளு டகிறேன். மறுக்கவில்லை.