பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஆழ உழவு. தக்க அளவு ஏற்ற எரு, காலத்தாற். பாய்ச்சும் அளவோடு கூடிய நீர், இத்தனையும் தேவை நல்ல விளைச்சலுக்கு. ஒப்புக் கொள்கிறேன் நான். ஒப்புக் கொள்ளும் உலகம். இத்தனைக்கும் மேலாக, மற்ருென்று தேவை. அது என்ன? மூளையைக் குடையத் தேவையில்லை. இதோ வள்ளுவர் வாய்மொழி. ஏரினும் நன்ருல் எருவிடுதல், கட்டபின் நீரினும் நன்று அதன் காப்பு. வயலே ஆழமாக உழுதோம்; அதைவிட கவனமாக எருவிட்டோம். கட்டு நீர் பாய்ச்சினேம். இத்தனைக் கும் மேலாக, விழிப்பாக, கவனமாக, அதிகமாக அப். பயிரினுக்குத் தேவை காப்பு. காவல் தவறில்ை பயிர் பாழாகிவிடும். விளைய வேண்டியது புல்லாகி விடும். விளைச்சல் வீணகிவிடும். ஒப்புக் கொள்வதற்கு அடை யாளமாகத் தலையாட்டுகிறீர்கள். நல்லது. கல்விப் பயிருக்கும் காவல் தேவை. காப்பு தேவை, கட்டுப்பாடு தேவை. அப்போதே கல்விப் பயிரின் முழுப்பலனைப் பெற்று மகிழலாம். இப்படி உரையாற்றினர், காவலர் பாரதி.