பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 எச் செயலுக்கும், எத்தொழிலுக்கும் கேரிய முறையும் உண்டு; கோணல் முறையும் உண்டு. விரைந்தோடும் காலத்தைப் பிந்தியதை அறிவதில் வீணுக்க வேண்டாம். அன்பர்களே! நேரிய முறையினே அறிவதிலேயே கருத்தினை ஊன்றுவோம் வாரீர். - ஒருவனும் ஒருத்தியும் கருத்தொருமித்து, மணம் முடித்து, கல்வாழ்வு வாழ்வதே இயற்கை. இவ் வியற்கை அறம், இல்லறம் எனப்படும். இல்லறத்தி னின்றும், கிளேத்து மலர்வதே பிற அறங்கள். அத்தனே அறங்களுக்கும் மூலமாக அமைந்ததே, இல்லற வாழ்க்கை. இயற்கை நெறியும், அறத்தின் அடியுமாகிய இல்வாழ்க்கையே, அறன் என்று அழைக்கப்படும். அழகன் என்று பெயரிடப்பட்ட தாலேயே, ஒருவன் எக்காலமும் எல்லோர்க்கும் அழகளுகக் காட்சியளிப்பான் என்பது உறுதியா? இல்லை. இளமை அழகு, வாலிபச் சேட்டைகளால், கடுமைக் கோணல்களால், குறைபடாதிருந்தால் மட்டுமே, பழுதுபடாதிருந்தால் மட்டுமே, அமுககை என்றென்றும் ஒளி விடுவான. அதே போல் அறம் என்று சிறப்பித்துக் கூறப்படும் இல்வாழ்க்கை, பிறர் பழிக்கக் காரணமாக இல்லாத போதே, பெயர் பொருத்தம் பெற்று விளங்கும். நூறு நாட்கள் பழிப்பிற்கு இடமின்றி வாழ்ந்தோம்; மூன்று நாட்களே முறை தவறி = கடந்தோம்,' என்பது, பழிப்பற்ற வாழ்க்கையாகாது. எல்லா நாட்களும், இல்லற நெறிப்படி கடக்க வேண்டும். அப்போதே,