பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பழி வந்து ஒட்டாது. அத்தகைய வாழ்க்கையைச் சிட்டிக் காட்டும், குறள் இதோ அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. அறங்களின் மூலமாகிய இல்வாழ்க்கையில் அறவுணர்ச்சி உயிர்ப்புப் பெற்று ஓடவேண்டும். அறவுணர்ச்சி, விளை உணர்ச்சி; முதல் உணர்ச்சி அல்ல. இது பெரும்பாலோர்க்கான பொதுவிதி: தித்திப்பை மாம்பூவில் சுவைக்கிருேமா? இல்லே. மாம்பிஞ்சில் சுவைக்கிருேமா? பெரும்பாலும் இல்லே. மாங்கனியில் சுவைக்கிருேமா? ஆம். நல்ல மாங்கனி யின் குறிப்பே தீஞ்சுவை. அத்தகைய மாங்கனிகட்ட, கனிவதற்கு முன், வெம்பி வீழ்ந்து விட்டால், ஏமாற்றமே. இயல்பான இல்வாழ்க்கை, அறமெனும் நற்கனியாவதற்கு முன் வெம்பி, வீழ்ந்துவிடக் கூடாது. வெம்பி வீழாத இல்வாழ்க்கைக்கு என்ன தேவை? அன்பு தேவை. எத்தகைய அன்பு? இயல்பான அன்பு: இயற்கையான அன்பு. ஆணை யிட்டுத் தள்ளப்படும் அன்பல்ல. நடிப்பு அன்பல்ல. பொருளேக் கொடுத்துப் பெறும் அன்பல்ல. நெருக்கடி அன்பல்ல. பலாவின் பண்பு இனிமை. வாழைப் பழத்தின் பண்பும் இனிமை. மாங்கனியின் பண்பும் இதுவே. அது போன்றே, இயல்பாக, ஒருவனும் ஒருத்தியும் ஒன்று கூடி, கெறிப்படி கடத்தும் இல்வாழ்க்கையில் பண்பு, அன்பு. சீர்வரிசையின் அளவிற்கு ஏற்ப