பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வளரும் அன்பு இல்வாழ்க்கையின் பண்பு ஆகாது: அது வாணிகம். (இல்லறத்தில் ஈடுபடும் இருவருக்குள் வாணிகத்திற்கு, இடமே இல்லை. இல்லறத்தை மேற்கொள்ளும் இருவர் விரும்பாவிட்டாலும், மற்ற வர் கொடுமையால், நெடுங்காலக் கண்மூடிப் பழக்கத் தால், அப்போதைக்கப்போதே வாங்கி வைக்கும் பொருட் பேராசையால், இல்லறத்தின் பண்பு, நம் சமுதாயத்தில் கெடுக்கப்படுகிறது. (இல்லற வாழ்க் கையின் தொடக்கத்திலேயே அன்பெனும் பண்பின் மேல், பிற குப்பைகள கொட்டப்படுகின்றன. பொருங்தாக் குப்பை கூளங்களை வயலில் கொட்டினல், பயிர் பாழாகிவிடும் என்பதை அறிவீர்கள். எனவே எருவாகக் கூடிய கூளங்களை மட்டுமே, உரிய காலத் தில், உரிய அளவில், உரிய பக்குவப்படுத்தி, வயலில் இடுவீர்கள். அதேபோல், இருவரை இல்வாழ்க்கைப் படுத்தும் போது, இருவரது அன்பும் இயல்பானதா, பண்பானதா,எனவே நிலைக்கக் கூடியதா என்பதையே முதலும் முடிவுமாகக் கருத வேண்டும்) o திருமணம் கொள்ளும் இருவரிடை அன்பு என்னும் பண்புவளம் நிறைந்தால் வாழ்க்கை தழைக் கும். தான் என்னும் முனைப்பில் வளர்ந்த மகனும், மகளும், தனக்காகவே உலகம் என்று கனவு கண்டே வாழ்ந்த ஒருவனும் ஒருத்தியும், வாழ்க்கைத் துணை யானதும், புதியதோர் நிலையில் கின்று, பெரியதோர் படிப்பினையை, அரியதோர் முறையில் பெறுகிருர்கள். தன்னையே எண்ணி எண்ணி வாழ்ந்த மகன், மனைவி யையும் எண்ணி எண்ணி வாழத் தொடங்குகிருன். பெண்ணின் கல்லாள் நிலையும் அத்தகையதே. மெல்ல,